என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமெரிக்கா ஓபன் டென்னிஸ்
நீங்கள் தேடியது "அமெரிக்கா ஓபன் டென்னிஸ்"
- மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
- இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதினர்.
இதில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.
ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த போட்டியின் தோல்வியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா நிறைவு செய்துள்ளார்.
அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். #USOpen2018 #Djokovic
வாஷிங்டன் :
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் செர்பியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் கையே ஓங்கி இருந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிசில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 3-வது இடத்தை பீட் சாம்ப்ராஸ் உடன் பகிர்ந்துகொண்டார் ஜோகோவிச். #USOpen #Djokovic

அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கணை செரீனா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதியில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவை வீழ்த்தி அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் எனும் பெருமை பெற்றுள்ளார் ஒசாகா.
இந்த போட்டியின் போது செரினாவுக்கும் நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சையுடன் முடிந்தது.
இரண்டாவது செட்டை செரினா விளையாடும் போது அவரது பயிற்சியாளர் கைகளால் அடிக்கடி சைகை செய்தார். அதனை விதிமீறல் என நடுவர் கண்டித்தார். ஆனால் செரினா, தனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறு என என்னை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டினார், ஏமாற்றி வெற்றி பெருவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன் என பதிலளித்தார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர், அவரது டென்ன்ஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி ஆட்டத்தில் செரினாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சாந்தப்படுத்தினர்.
இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டாவது செட்டை தொடர்ந்த செரினா 6-4 என ஒசாகாவிடம் பறிகொடுத்தார்.
தனது முன்மாதிரி செரினா தான் என அடிக்கடி கூறிய ஒசாகா, தற்போது அதே செரினாவை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
×

X